மேஷம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 12, 20, 21, 29, 30, 31. பாதக நாட்கள்: 9, 10, 16, 22, 23.

Advertisment

அஸ்வினி: இம்மாதம் உங்களுடைய விடாமுயற்சி அற்புதத்தை உருவாக்கும் என எண்ணி செயல்பட இயலாது. இருப்பினும் அலுவலகப் பணியாளர்கள் நல்ல வாய்ப்பினை எதிர்பார்க்கலாம். 4-ஆம் தேதி மாலைக்குமேல் முக்கிய வேலைகள் வெற்றிதரும். செவ்வாய் ராசிக்கு 8-ல் இருக்கிறார். தம்பிகள் இருந்தால் உங்களால் அவர்களுக்கு பாதிப்பு வரலாம். வீட்டின் கடைசி பாகத்தில் இருட்டான அறை இருந்தால் அங்கு இம்மாதம் பளிச்சென்று ஒளிகூடாது. கணவனை இழந்தவர்களைப் பரிவுடன் கவனிப்பதால் நல்லவை நடக்கும். சமையல் கூடத்தில் ஒரு பொழுது உணவுண்ண வேண்டும். செய்தி சேகரிப்போருக்கு புகழ் ஓங்கும். இவ்வருடம் தொழில் கடன் வாங்குதல் கூடாது. (வீடு, மனை வாங்க கடன் வாங்கலாம்.)

பரணி: அடுத்தவர்களை இம்மாதம் முக்கியமானவர்களாகக் கருதவேண்டும். 11, 12, 13 தேதிகளில் வெளியிடங்களில் உணவுண்ப தைத் தவிர்க்கவேண்டும். வாலிபர்களுக்குத் திருமணம் நிச்சயமாகும். ஐந்து வெள்ளிக்கிழமை கள் சுக்கிர ஹோரையில் தயிர் கலந்த உணவு நன்று. திருமணத்தடை அகன்றுவிடும். தொப்புள்கொடி உறவுகள் நெருக்கடி தருவார் கள். குலதெய்வங்களை வணங்கவேண்டும். படுக்கையறையில் சிவப்பு நிறக் கம்பளங்கள் இருந்தால் அதை இம்மாதம் மட்டும் அகற்றுவதால், 9-ல் இருக்கும் கிரகநாதர்களின் வேகம் குறையும். வீட்டு மாடியில் செடி வளர்ப்போர் தண்ணீரின்றி செடி வாடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். (இவ்வருடம் மார்ச், மே மாதங்களில் அசையா சொத்து வாங்கலாம்.)

கிருத்திகை 1-ஆம் பாதம்: மற்றவர்களுக்காக சிறுசிறு உதவிகள் செய்வது இம்மாதம் நல்ல பலனை உருவாக்கும். சனி வருமானத்தையும் பதவி உயர்வையும் தருவார். இம்மாதம் பேரன்- பேத்தி பிறந்தால் 43 நாட்களுக்குப்பின் அவர்களைப் பார்ப்பதை சந்திரன் ஊக்குவிப்பார். திங்கட்கிழமைகளில் ஆலயத்திற்குப் பால் தருவது நல்ல பரிகாரம். 29, 30, 31 தேதிகளில் விரோதிகள் உங்களை சிக்கல்களில் இணைத்துவைக்க முயல்வார்கள். கவனமாகச் செயல்படல் மிக நல்லது. மெரைன் இஞ்சினீயர், தீயணைப்புத்துறை, ரயில்வே, இராணுவம் போன்ற துறையினருக்கு பதவி உயர்வு அல்லது விரும் பிய இடமாற்றம் கிடைக்கப் பெறும். புனர்பூசம், ஆயில்யம், சதய நட்சத்திரத்தில் பிறந்தோர் வாழ்க் கைத்துணையாக அமைந்திருந் தால், அடிபணிந்து நடப்பது நன்று. (இவ்வருடம் ஏப்ரல், ஜூன் மாதப் பயணங்கள் நன்மை தரும்.)

ரிஷபம்

Advertisment

ராசிக்கு சிறந்த நாட்கள்: 5, 6, 14, 22, 23. பாதக நாட்கள்: 12, 18, 19, 24, 25, 26.

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: எப்படிப்பட்ட பின்னடைவுகளையும் இம்மாதம் மாற்ற இயலும். உங்கள் குடும்பத்தார் எதிர் பார்க்கும் வாகன வசதி, சுற்றுலா என எல்லா ஆசைகளையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பூர்த்தி செய்யலாம். 4, 6 தேதிகளில் மட்டும் "டென்ஷ'னாக இருக்கநேரிடும். சிறு குண்டுமணி தங்கமாவது உடலில் இருந்தால் குருவருள் பெறலாம். சனியும், சூரியனும் 8-ல் இருப்பதால் ஹார்ட்வேர், பெயின்ட் வியாபாரம் செய்வோர் அதனை விரிவுபடுத்தலாம். தோல் உபாதை வந்தால் உடனே மருத்துவரை அணுகினால் கெடுதலிலிருந்து தப்பிக்கலாம். சிறு குழந்தைகட்கு கெடுதல் தொடர்ந்தால், கீழாநெல்லி இலையில் மாலைகட்டி பைர வருக்கு சாற்றி வழிபடுவதால் தோஷம் நிவர்த்தியாகும். (இவ் வருடம் மார்ச் 30 முதல் ஜூன் 30 வரை உடல்நலம் பேணவேண்டும்.)

ரோகிணி: இம்மாதம் தோற்றத் தைக்கொண்டு எவரையும் எடை போட வேண்டாம். உங்களுடைய பிறவிக்குணம் கச்சிதமாகத் துணை வரும். பொதுவாக இவர்களுக்கு 30 வயதுமுதல் 50 வயதுவரை யோக காலமாம். ராகு தசையில் இளமையில் திருமணம் செய்தால் நல்லவை தொடர்கதையாகும். ராகு 2-ல் இருப்பதால் இம்மாதம் வீடு, அலுவலகம் போன்றவற்றை மாறுதல் செய்யலாம். பரிசுப்பொருள் வாங்குவது, கொடுப்பதைத் தவிர்ப்பது நன்று. சனி, கேது இருக்குமிடம் சீராகத் தெரியவில்லை. எனவே பெற்ற குழந்தைகளிடமிருந்து எந்த உதவியும் எதிர்பார்க்க இயலாது. கூரைவீட்டில் இருப்போர் நெருப்பு விஷயங்களில் கவனமாகச் செயல்படவேண்டும். வாயுத் தொல்லை, அஜீரணம் போன்றவையும் வேதனைக்கு உட்படுத்தும். முந்திரிப்பருப்பு மாலைகட்டி அல்லது ஒருபிடி பருப்பை பைரவர் பாதத்தில் வைத்து மனக்குறைகளைக் கூறி வணங்கினால் புத்திர தோஷம் நீங்கும்.

Advertisment

மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்: செயலில் இறங்கும்முன் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டிய மாதம். 11, 12, 13 தேதிகளில் பெண்கள், மாணவர் கள், உத்தியோகம் பார்ப் போருக்கு எல்லாமே வெற்றி. வாடகைப்பணம், குத்தகைப் பண விவகாரங்களால் வீண் வாக்குவாதம் ஏற்படும். வாகனம் வைத்திருப்போர் மூன்றாவது வாரம் கவனமுடன் செயல்படல் நன்று. தூரப் பயணம் செல்ல வேண்டிய கட்டாயம் மாத இறுதியில் வரும். முதல் தாரம், இரண்டாம் தாரம் என குடும்பம் நடத்துவோருக்கு, அவர்களின் மருத்துவத்துக்காக செலவு செய்யநேரும். தென்திசை நோக்கிய அலமாரியில் வீரிய மாத்திரைகள் இருந்தால் வேறிடத்தில் வைத்துக் கொள்வது நல்லது. அனுமனுக்கு வெற்றிமாலை சாற்றி மனக் குறைகளைக் கூறி வணங்கி வந்தால் தோஷம் அகன்றுவிடும். (இவ்வருடம் ஜூன் மாதத்திற்கு முன்னால் கடனில் வாகனம் வாங்கலாம்.)

மிதுனம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 16, 24, 25, 26. பாதக நாட்கள்: 1, 14, 20, 21, 27, 28.

மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள்: செயல்களில் இறங்கும்முன் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும். அரசியலில் ஈடுபட்டோருக்கு, வயதில் மூத்தவர்கள்மூலம் எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைக்கப்பெறும். 8-ஆம் தேதி வாக்குவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ராசிக்கு 7-ல் குரு இருப்பதால் ஆர்கானிக் பழங்கள்- குறிப்பாக மஞ்சள்நிறப் பழங்கள் அதிக மகசூலைப் பெற்றுத்தரும். கோவில் நிலங்களை ஆக்கிரமித்து வீடு, கட்டடம் கட்டியிருந்தால் இம்மாதம் அதனைப் புதுப்பிப்பது கூடாது. இம்மாதம் பெண் குழந்தை பிறந்தால், தந்தை வியாபாரத்தைப் பெருக்குவது நற்பலனைத் தராது. இம்மாதம் வயது 25 என்றாலும் திருமணத்தைத் தவிர்ப்பது நன்று. தங்கமேனி எனப்படும் குப்பைமேனியில் மாலைகட்டி பைரவரை வணங்குவதால் தோல் வியாதி தீரும். (இவ்வருடம் மே 11 முதல் செப்டம்பர் 29 வரை வியாபாரம் விரிவு செய்தல் கூடாது.)

திருவாதிரை: பயத்தைத் தவிர்த்து துணிவுடன் செயல்படவேண்டிய மாதம். 9, 10 தேதியில் உங்கள்மேல் அக்கறையுடைய ஒருவரால் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம். 16, 17 தேதிகளில் எந்த முதலீடுகளும் வேண்டாம். இம்மாதம் ஆலயங்களுக்குச் சென்று அல்லது குலதெய்வத்தை வணங்குவதால் மனதுக்கு தெம்பு உருவாகும். சனியின் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் சுத்தமில்லா நாட்களில் உடலுறவைத் தவிர்த்தல் நன்று. மருந்து விற்பனை செய்வோர், நெய், பஞ்சு, பருத்தி பயிர் செய்வோருக்கு வியாபாரம் மந்தமாகும். பழைய செம்புத் துண்டுடன் நீலநிறப்பூவையும் இணைத்து திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடல் நல்லது. இம்மாதம் திருமணமானால் மணமகன் பசுவின் கோமியத்தால் பாதத்தைத் தூய்மை செய்துகொண்டு வீட்டிற்குப் போவதால் சுக்கிரனின் தடை அகலும்.

புனர்பூசம்1, 2, 3-ஆம் பாதங்கள்: அதிர்ஷ்டத்தின்மீது குறைகூறுவதைத் தவிர்ப்பது நன்று. அதிர்ஷ்ட தேவதை கண் சிமிட்டும் மாதம். இம்மாதம் ஒரு ஏமாற்றத் திலிருந்து தப்பிப்பீர்கள். 24, 26 தேதிகளில் உடைமைகள் காணாமல்போய் திரும்பவும் பெறலாம். 27, 28 தேதிகளில் அரசுசார்ந்த நன்மைகள் மிகையாகக் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடு சென்று கல்வி பயிலும் சந்தர்ப்பம் சுலபமாகும். குழந்தைகளின் செலவினங்கள் மிகையாகும். தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் (நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நெய்) ஏற்றி வழிபட்டால், காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிடைக்கப் பெறும். ஏதோ காரணத்திற்காகப் பிரிந்த வாழ்க்கைத்துணையை இம்மாதம் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது நன்று. (இவ்வருடம் மார்ச் 30 தேதிக்கு மேல் போட்டி, பந்தயம் வெற்றிபெறும்.)

12rasi

கடகம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 9, 10, 18, 19, 27, 28. பாதக நாட்கள்: 2, 3, 16, 22, 23, 29, 30, 31.

புனர்பூசம் 4-ஆம் பாதம்: "வயதாகி விட்டது என புலம்பவேண்டாம்' என எடுத் துரைக்கும் மாதமிது. 4-ஆம் தேதிக்குமேல் நல்ல சந்தர்ப்பங்கள் நாடி வரும். உங்கள் வீட்டிற்குத் தேவையான எல்லா உபகரணங்களையும் வாங்க ராகு துணைபுரிவார். சனியின் இடத்தில் சூரியன் இருப்பதால் தாம்பத்தியத்தில் ஈடுபட மனம் இடம் கொடுக்காது. பெற்ற மகனால் புகழைப் பெருக்கும் விதமாக செவ்வாய் செயல்படுவார். குழந்தைகளின் கல்வி சார்ந்த கவலை மேலோங்கும். எதிரிகளை வெல்லலாம். ஞாயிற்றுக்கிழமை ஒரு பொழுது உப்பில்லா உணவை உட்கொண்டால் சூரியன் பக்கபலமாகச் செயல்படுவார். 11, 13 தேதிகளில் சிரித்த முகத்துடன் வலம்வரலாம். 6-ல் கேது. மகனையும், மனைவியையும் தனியாக நீண்டபயணம் அனுப்புதல் கூடாது.

பூசம்: "என்னால் என்ன செய்யமுடியும்' என சிந்திக்கக் கூடாத மாதம். எத்துறையைச் சார்ந்தவர்கள் எனினும் தன்னம்பிக்கை தரும்விதமாக கிரக நாதர்கள் செயல்படுவார்கள். 16, 17 தேதிகளில் பாராட்டப்பட்டாலும் 18, 19 தேதிகளில் வீணான வாக்குவாதம் மனவேதனை தரும். சூரியன் 7-ல். மனைவிக்கு ஆகாத மாதம். கருப்புநிறப் பசுவுக்கு புல், கீரை கொடுப்பது நன்று. காய்ச்சிய பாலை மீண்டும் மீண்டும் சூடாக்கிப் பருகுதல் கூடாது. எந்த புதுவேலை கள் தொடங்கும்போதும் சிறிது இனிப்பை அருந்தி தண்ணீர் பருகி ஆரம்பிப்பது நல்லது. ராகு 12-ல் புதன் வீட்டில் இருப்பதால் வருமானவரி சோதனை வரலாம்; ஆனால் பாதிக்காது. ராகு காலத்தில் எந்த முதலீடும் கூடாது. கோமேதக மோதிரம் இருந்தால் அணிந்துகொள்ளலாம்.

ஆயில்யம்: தனிமையில் சிந்தித்து செயல்படவேண்டிய மாதம். கூட்டு முயற்சிகள் வேண்டாம். தினக்கூலி செய்வோருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக சந்தான பாக்கியம் இல்லாதோர் இம்மாதம் முயற்சித்தால் நற்பலன் கிட்டும். மருத்துவத்துறையினர் விருப்பமானவற்றைப் பெற உயரதிகாரிகளை நாடலாம். புதிதாக மருத்துவமனை கட்டலாம். 21, 22, 23 தேதிகளில் சொந்தபந்தங்களால் போதிய ஆதரவு கிடைக்கப்பெறும். 26, 28-ல் நாவடக்கம் அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும். மாதத்தின் கடைசி வாரம் புதுப்பாதை அமைத்துத்தரும். பிதுர் தோஷம், வம்சாவளி தோஷம், குலதெய்வ சாபம் போன்றவை அகல, ஞாயிறன்று ராகு காலம் அல்லது அமாவசையன்று கருநொச்சி மாலை கட்டி பைரவருக்கு சாற்றி மனக்குறைகளைக் கூறி வணங்குவதால் எல்லா கஷ்டங்களும் வேரோடு மறையும். (இவ்வருடம் வியாபார ரகசியங்களைப் பிறரிடம் கூறுவது கூடாது.)

சிம்மம்

ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 12, 20, 21, 29, 30, 31. பாதக நாட்கள்: 5, 6, 18, 19, 24, 25, 26.

மகம்: யோசனைகள் உங்களிடமிருந்து தப்பிக்க அனுமதிக்கக்கூடாத மாதம் இது. இம்மாதம் வெளியூர், வெளிமாநிலம், அயல்நாட்டில் இருப்போர் ஜென்மபூமியில் அசையா சொத்துகள், நிலம், வீடு வாங்க, விற்க நல்ல தருணம். வில்லங்கம் இல்லாது நிறைவேறும். வெளியூர்ப் பயணங்களின்போது உணவில் கவனம் வேண்டும், 5, 6 தேதிக்கு மேல் அரசு சார்ந்த விவகாரங்கள் இருந்தால் அவை மறையும். வாலிபர்களுக்கு 8-ஆம் தேதிக்குமேல் வேலைவாய்ப்பு, திருமணம் போன்றவை மனம்போல் அமையும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு ஆர்டர்கள் குவியும் வாய்ப்புள்ளது. சனி வீட்டில் சுக்கிரன் இருப்பதால், மாமன், மைத்துனன், சொந்த பந்தங்களுடன் கூட்டு வியாபாரம் கூடாது. சனிக்காக கூறவேண்டிய மந்திரம்: "சனைச்சர க்ரஹஸ்ய ப்ரத்யதி தேவதாம் பரஜாதிம் த்யாயாமி: ப்ரஜானாம் பதியே நம:'

பூரம்: உங்கள்மீது திடமான நம்பிக்கை வைத்துத் திறம்பட செயல்படவேண்டிய மாதம். மூன்றாவது வாரம் பணவரவு அதிக மாகும். 18, 19 தேதிகளில் பழைய நண்பர்கள் உதவியால் வியாபாரம், தொழிலில் முன்னேற் றம் தெரியவரும். இளஞ்ஜோடிகள் 22, 23 தேதிகளில் மௌனம் கடைப்பிடித்தல் பேருதவியாக இருக்கும். சூரியனின் அருளைப் பெற, சூரிய ஹோரையில் கோதுமை அல்வா வாங்கி தானம் செய்தல் நன்று. உங்களுடைய நடைமுறைப் பெருமைகளை மூத்த குடிமக்கள் பாராட்டுவார்கள். மனதில் சிற்றின்பத் தாக்கம் மிகையாகும். நீதிக்குப்புறம்பாக நடப்பது கூடாது. கருப்பு, நீலநிற ஆடைகளைத் தவிர்க்கவும்.

உத்திராடம் 1-ஆம் பாதம்: குழந்தை களின் கல்விக்கு ஆக்கப்பூர்வமாக செயல் படவேண்டிய மாதம். வேலைவாய்ப்புகள் சுலபமாக அமையும். 16-ஆம் தேதிக்குமேல் புதனின் கருணையால் வருமானம் பெருகும். ராசிக்கு 5-ல் சனியுடன் கேது. கருவுற்ற மாதர்களுக்கு இது முதல் பிரசவமெனில் உஷார் நிலையில் செயல்படவேண்டும். கருவுற்ற கால அளவில் பரிகாரங்கள் தேவையில்லை. கடவுளின் நேர்பார்வையில் குழந்தை வளரும். 27, 28 தேதிகளில் கணவன்- மனைவி இருவரும் இணைந்து நல்ல முடிவுகள் எடுத்து வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைப்பீர்கள். ஆணித்தரமான முடிவுகள் ஆனந்தத்தைப் பெற்றுத் தரப்போகிறது. இம்மாதம் பிறரிடம் பணப்பரிமாற்றத்தில் எச்சரிக்கையாக இருத்தல் நன்று. முதலீடு பின்னடை வைத் தரும். 31-ஆம் தேதி மாலைக்குப் பிறகு நல்ல சேதி தொடராக வரும். பயமில்லாத பிறவி இல்லை. பைரவரை வணங்கினால் நன்மை பெருகும். (இவ்வருடம் செப்டம்பர் 23 வரை பணம், நகையை நம்பிக்கையில்லாதோரிடம் கொடுப்பது கூடாது).

கன்னி

ராசிக்கு சிறந்த நாட்கள்: 5, 6, 14, 22, 23. பாதக நாட்கள்: 1, 7, 8, 20, 21, 27, 28.

உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: "யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க- என் காலம் வரும் வந்தபின்னே வாங்கடா வாங்க' என தைரியத்துடன் வீரநடை போடலாம். 11-ஆம் தேதிக்குமேல் கிரக நாதர்கள் போட்டிபோட்டு உங்களை நல்வழிப்படுத்தப் போகிறார்கள். சனி 4-ல் இருப்பதால் விவசாயம் செய்வோர் பாம்பு விஷயத்தில் உஷாராக நடத்தல்வேண்டும். மதம் மாறி காதல் வலையில் வீழ்வோருக்கு சனி பகவான் சுமுக நிலையைப் பெற்றுத்தருவார். இம்மாதம் மட்டும் சனிக்கிழமை இரவில் பால் அருந்துவதைத் தவிர்க்கலாம். மார்பில் அதிக ரோமம் வளர்ந்தவர்களிடம் கொடுக்கல்- வாங்கல் வேண்டாம். நீண்டகாலமாக பூர்வீகச் சொத்தை அனுபவிப்பவர்கள் இம்மாதம் விற்பது கூடாது.

ஹஸ்தம்: நட்புறவு ஒன்றுதான் இம்மாதம் லாபத்தைப் பெற்றுத்தரும். 5-ல் சூரியனுடன் புதன். மாணவர்கள், கணக்கர்கள், ஆடிட்டர்களுக்கு திறமைக்கு மேலும் நல்லவை நடக்கும் மாதம். வானொலி, தொலைக்காட்சி, விளம்பரத்துறையினருக்கும் பணவரவு நிம்மதியைத் தரும். எழுத்தாளர்களுக்கு தேவையற்ற விமர்சனம் பின்னடைவுக்கு வழிவகுக்கும். மாற்றான் மனைவிமீது மையல் கொள்வோரை, தன் மனைவிமூலம் சுக்கிரன் தண்டிக்கச் செய்வார். அலுவலக ஊழியர்கள் சக ஊழியரை வன்மத்தில் காட்டிக்கொடுத்தால், ராகு தண்டனைக்கு உட்படுத்துவார். டுட்டோரியல் நடத்துவோருக்கு, மாணவர்கள் சாதனை படைப்பார்கள். "கோல்ட் கவரிங்' உற்பத்தியாளர்கள், விற்பனையாளர் கள் புதனை வணங்கினால் வியாபாரத்தை அதிகரிக்கச் செய்வார். வியாபாரத் தல வாசலில், காலையில் உப்புகலந்த நீரைத் தெளிப்பதால் திருஷ்டிகள் அகலும்.

சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்: செவ்வாய் ராசிக்கு 3-ல். கேது, சனி, சூரியன், புதன், குரு இவர்கள் யாவரும் 4-ல். சுக்கிரன் 5-ல். எனவே பொருளாதாரத்தில் தன்னிறைவைத் தருவார்கள். தொழில், வியாôபரத்தில் கவனமாக செயல்படவேண்டும். ஏதோவொரு தொடர்பு விட்டுப்போகும் நிலை ஏற்படலாம். நல்ல தொழிலாளர்கள், விசுவாச ஊழியர்கள் எல்லாத்துறையிலும் கிடைக்கப் பெறலாம். 22, 23 தேதிகளில் உடல் உபாதைகள் வந்து மறையும். கணவன்- மனைவி உறவில் 29, 30, 31 தேகிளில் ஒருமித்த கருத்தால் குடும்பம் அமைதியாக நடைபோடும். சனி பகவான் தனுசில் இருப்பதால், செடிகள் நிறைந்த சூழ்நிலையில் வாழ்வோர் பாம்புத் தொல்லைக்கு உட்படலாம். எனவே இரவில் வீட்டின் வெளிவாசலில் பூண்டு, உப்பு இரண்டையும் கலந்து துவிவிடுதல் நன்று. (இவ்வருடம் செப்டம்பர் 10 முதல் நவம்பர் 14 வரை வாகனம் ஓட்டும்போது கவனம் வேண்டும்.)

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 93801 73464